search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் விழுந்து பலி"

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே சித்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடராஜுக்கு வீட்டின் அருகே விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கிணறு ஒன்றும் அருகே உள்ளது.

    நடராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடராஜ் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது தனது விவசாய நிலத்தின் அருகே சென்ற போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றில் விழுந்த நட்ராஜை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் நண்பர்களால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சப்பந்தி குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மவின்குமார் (வயது 24). பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார். நேற்று ஊருக்கு வந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அங்குள்ள தென்னந்தோப்பில் மது குடித்தனர்.

    போதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி விட்டு விளையாடினர். மவின்குமாருக்கு அதிகளவிலான போதை தலைக்கேறியது. இதனால் அவரை அங்குள்ள கிணற்றில் தூக்கி போடுவதற்காக தூக்கினர். இதனை அவரது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் மவின்குமாரை தூக்கி கிணற்றில் போட்டனர்.

    மேலும் அவர்களும் கிணற்றுக்குள் குதித்து குளித்தனர். மவின்குமார் தண்ணீரில் தத்தளித்தார். நீச்சல் தெரியாத அவர் கிணற்றுக்குள் மூழ்கினார். இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை மவின்குமாரின் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது கிணற்றின் அருகே அவரது செல்போன் கிடந்தது. அதில் நண்பர்கள் சேர்ந்து அவரை கிணற்றில் தூக்கி வீசிய வீடியோ காட்சிகளை கண்டு திடுக்கிட்டனர். கதறி அழுத அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.


    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மவின்குமாரை பிணமாக மீட்டனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மவின்குமாரின் நண்பர்கள் சுதர்சன், அருண், அஜித், பாவித் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    ×